Header Ads

Breaking News
recent

விபத்து சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் விளக்கமறியலில்!

திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மோதியதில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் உயிரிழந்ததையடுத்து முச்சக்கர வண்டியின் சாரதியை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (8) உத்தரவிட்டார்.

அலியார் வீதி, காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பகுதியில் திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் கடந்த முதலாம் திகதி முச்சக்கர வண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், மகனும் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் மூதூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மகன் உயிரிழந்த நிலையில் விபத்துக்கு காரணமான முச்சக்கர வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.