எம்.சி.சி உடன்படிக்கையினை முற்றாக இரத்து செய்ய வேண்டும் : அகில விராஜ்!

எம்.சி.சி உடன்படிக்கையினை முற்றாக இரத்து செய்வதாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர் அவர் எம்.சி.சி உடன்படிக்கையை இரத்துச் செய்வார் என மக்கள் எதிர்பார்த்த போதிலும் இன்னமும் எம்.சி.சி விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் எம்.சி.சி உடன்படிக்கை எந்த காரணத்திற்காகவும் கைச்சாத்திடப்படமாட்டாது என தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதுவரையிலும் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையை இரத்துச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே எம்.சி.சி உடன்படிக்கையினை முற்றாக இரத்து செய்வதாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு நான் சவால் விடுக்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்