Header Ads

Breaking News
recent

இரம்புக்கனை மக்களோடு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சினேகமான சந்திப்பு!!!

பொதுஜன பெரமுன கட்சி தலைவரும், குருநாகல் மாவட்டத்தின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (9) இரம்புக்கனை நகருக்கு வருகை தந்தார்.

காலை 10 மணியளவில் வருகை தந்த அவர் பிரஜாஷாலாவ பொது மண்டபத்தில் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

பொதுஜன பெரமுன கட்சி கேகாலை மாவட்டம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கணக ஹேரத் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கே அவர் இவ்வாறு சமூகமளித்தார்.




இன்னும் இரம்புக்கனை பிரதேசத்தின் பிரமுகர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் சகல மதத் தலைவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

படப்பிடிப்பு & செய்தித் தொகுப்பு .....
பிராந்திய நிருபர்கள்.
M.உஸ்மான்
M.அஹ்மத்
Powered by Blogger.