Header Ads

Breaking News
recent

ரிசாட் பதியுதீனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணை!

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்யும் வகையில் முன்னாள் அமைச்ச ரிசாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இரண்டு முறை அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த இரு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.

இது தொடர்பிலான விடயங்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெளிவு படுத்தியுள்ளது.

இதற்கமைய, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
Powered by Blogger.