பல்வேறு ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!!!

இன்று முற்பகல் 10.00 மணியளவில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) திட்டமிட்ட குற்றச் செயல்களைத் ஒழிக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, எல்பிட்டிய, கனேகொட பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், பல்வேறு ஆயுதங்களுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த சந்தேகநபர் வசமிருந்து 12 துளை கொண்ட துப்பாக்கி ஒன்று, அதற்கான 06 தோட்டாக்கள், உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று, கைக்குண்டு ஒன்று, T56 வகை துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் 23, அதற்கான மெகசின் ஒன்று, 3 வாள்கள், இராணுவ சீருடை ஒன்று, இராணுவ காற்சட்டைகள் 03 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர், 28 வயதான கனேகொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரை நாளைய தினம் (22) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்