ஹெரோய்ன் போதைப் பொருளுடன் அட்டாளைச்சேனைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

இதற்கமைய, அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.எச்.முகம்மத் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்
கல்முனை பிராந்தியத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று முன்தினம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, குறித்த சந்தேகநபர்கள் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
22 வயதிற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்ட ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர், ஹெரோயினை விற்பனை செய்வதற்காக அம்பாறை பரகாகல பகுதியில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு வருகை தந்துள்ளதாகவும், ஏனைய மூவரும் அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே, சந்தேகநபர்கள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.