அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கொரொனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் மெக்சிகோவில் 895 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, மெக்சிகோவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 14 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இரண்டு லட்சத்து 68 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை ஒரு கோடியே 19 லட்சத்து 49 ஆயிரத்து 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஐந்து லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது