Header Ads

Breaking News
recent

அமெரிக்க வைத்தியசாலைகளில் விரைவில் இடப் பற்றாக்குறை

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், வைத்தியசாலைகளில் விரைவில் இடப் பற்றாக்குறை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் உணவு விடுதிகள், மதுபான நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் தேவாலயங்கள் என்பன திறக்கப்பட்டன.

இதன் காரணமாக மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையிலேயே, வைத்தியசாலைகளில் விரைவில் இடப் பற்றாக்குறை ஏற்படலாம் என அந்த நாட்டு புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

சர்வதேச ரீதியில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.