Header Ads

Breaking News
recent

முரண்பாடுகளைத் தோற்றுவித்து வாக்குகளை சூறையாட திட்டம் : சிவசக்தி ஆனந்தன்!

சமூக முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு வாக்குகளை சூறையாடுவதற்கான பல முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நீண்ட காலமாக தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய இந்த பிரச்சினையை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு உறுதியான ஒரு நேர்மையான அரசியல் தலைமையும், அரசியல் வெற்றிடமும் நீண்ட காலமாக ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களினுடைய வாக்குகளை சூறையாடும் வகையில் அரசும், அரசு சார்பான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் மக்கள் மத்தியில் தாங்கள் பாரிய அளவில் அபிவிருத்திகளை செய்ய உள்ளதாகவும், தமிழ்த் தரப்பினர் தமக்கு மீண்டும் சந்தர்ப்பம் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்காக வாக்களிக்கும் படியும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய மத முரண் பாடுகளையும், சமூக முரண்பாடுகளையும் தூண்டிவிட்டு வாக்குகளை சூறையாடுவதற்கான பல முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு உள்ளது.

கடந்த காலத்தில் ஒரு உறுதியற்ற, அரசிற்கு ஆதரவு வழங்குகின்ற தமிழ்த் தலைமைகளை தெரிவு செய்யாமல் தமிழ் மக்களுக்காக உறுதியோடு செயல் படக்கூடிய புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.