Header Ads

Breaking News
recent

அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம் எமக்கே உள்ளது : பிரதமர் மஹிந்த!

நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம் தமது கட்சிக்கே உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

லுணுகம்வெஹெர பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி தற்போது இரண்டாக பிளவடைந்து தலைமைத்துவமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, முறையான திட்டமிடல் அற்ற தலைமைத்துவத்தை மக்கள் நிராகரிப்பார்கள் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்க காலப்பகுதியில், சில வீடமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், நிர்மாணிப்பதற்கு செலவிடப்பட்ட பணத்தைவிட அதிக தொகை பணம், திறப்பு விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளுக்காக செலவிடப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், கலாசார நிதியத்தின் பணம், பாலம் நிர்மாணித்தல் உள்ளிட்ட வேறு செயற்பாடுகளுக்கு பாரியளவில் செலவிடப்பட்டுள்ளதால், சிறு விகாரை அபிவிருத்தி மற்றும் புராதன இடங்கள் அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட அந்த நிதியத்தின் நோக்கம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வீடமைப்பு திட்டம் என்ற போர்வையில் யானை நடமாட்டமுள்ள இடங்களில் சிறு வீடுகளை நிர்மாணித்து, வீட்டு உரிமையாளர்களை கடனாளியளாக மாற்றியுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்
Powered by Blogger.