அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் விஷேட வேண்டுகோள் !

(பிராந்திய செய்தியாளர் நசீம்)
சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று 2020.07.03 ஜும்மாவுடைய தொழுகையை அழகானமுறையில் நிறைவேற்றுவதற்கு இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களதினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டிருக்கும் இச்சலுகையினை மிகவும் பெறுமதியாக உபயோகித்துக்கொள்வது இந்தக் கட்டத்திலே அவசியமான ஒன்று.
ஜும்மாவுக்கு செல்லக்கூடியவர்கள் முக கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பேணி சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களையும் கடைப்பிடித்து ஜும்மாவினை நிறைவேறற்றுவது அவசியமாகும்
எனவே covid 19 காக தரப்பட்டிருக்கும் இச்சலுகைகளை இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவுரைகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறு நாட்டு முஸ்லிம்களிடம் ஜம்இய்யதுல் உலமா வேண்டிகொள்கிறது
அஷ் ஷேய்க் உமர்தீன் ரஹ்மானி
பிரச்சாரக்குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
2020.07.03