துப்பாக்கி பிரயோகம் : இருவர் உயிரிழப்பு!

தென் கரோலினா பகுதியில் அமைந்துள்ள இரவுநேர களியாட்ட விடுதியொன்றில் நேற்று இந்த தாக்கதல் நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இனந்தெரியாத குழுவினாரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் கரோலினா பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.