Header Ads

Breaking News
recent

தாஜ்மஹாலை பற்றிய புதிய தகவல்!



இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள நினைவுச்சின்னமான தாஜ்மஹாலை மீண்டும் திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய கடந்த மார்ச் மாதம் தொடக்கம் தாஜ்மஹால் பகுதி காலவரையரையின்றி மூடப்பட்டது

இந்த நிலையில் புது டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை போன்ற நினைவிடங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் இதுவரை எந்தவித அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாகஉத்தரப்பிரதேச மாநிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 23 ஆயிரத்து 932 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் 421 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன
Powered by Blogger.