Header Ads

Breaking News
recent

சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருவேன் : அமைச்சர் டக்ளஸ் உறுதி!!

(எஸ்.டீ.தூயவன்) 
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் தலைமை பணிமனையில் சுகாதார தொண்டர்களுடனான சந்திப்பொன்று நேற்று (04) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஏற்றப்பாட்டு செய்யப்பட்டிருந்தது.
அங்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்.... 

உங்கள் பிரச்சனை மிக நீண்ட காலங்களாக இருக்கின்ற ஒரு விடையம் . நீண்ட காலமாக நீங்கள் வந்து போகின்றீர்கள் இருப்பினும் கடந்த ஐந்து வருடங்கள் நாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. இப்போது அது கைகூடி வந்துள்ளது.
வரும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எம்மோடு அணி திரளுங்கள் “நான் சொல்வதை செய்வேன்” ஆகவே உங்கள் நியமனத்திற்கு வயது ஒரு பிரச்சனையாக இருக்க முடியாது. எனவே உங்களது நிரந்தர நியமனங்களை குறைந்தது ஐந்து மாதங்களில் நான் பெற்றுத் தருவேன் . என யாழ் மாவட்ட சுகாதார தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உறுதிபட தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ் தலைமை பணிமனையில் இடம்பெற்ற சுகாதார தொண்டர்களுடனான சந்திப்பிலேயே மேற்படி உறுதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.