Header Ads

Breaking News
recent

வாகன விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு!!!

புத்தளம் வீதியின் பாதெனிய, மாரகஸ்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக வடிகமங்காவ உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 3.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக வடிகமங்கா பயணித்த வாகனம், வலது திசையில் சென்றுள்ள நிலையில், எதிர்திசையில் வருகை தந்த லொறியொன்றுடன் மோதியே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

இதன்படி, பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், லொறியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில், நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Powered by Blogger.