கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக பதிவானது இலங்கையில் 12ஆவது மரணம்!!!
இலங்கையில் 12ஆவது கொவிட்-19 நோய் காரணமான மரணம் பதிவாகியுள்ளது.கடந்த வியாழக்கிழமை (20) இந்தியாவிலிருந்து வந்த 47 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, IDH வைத்தியசாலை தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இறுதியாக கடந்த ஜூன் 01ஆம் திகதி இலங்கையில் 11ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்தது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.
12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.
நேற்று (22) குவைத்திலிருந்து வந்த 02 பேர், சென்னையிலிருந்து வந்த 02 பேர், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவர் (01), ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்த ஒருவர் (01) ஆகிய 06 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
