வாகன விபத்து: 20 வயது இளைஞன் பலி
ஹொரவப்பொத்தானை மதவாச்சி பிரதான வீதி கிருளாகல எனும் இடத்தில் இன்று மதியம் (27)மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பலியாகியுள்ளார்.
ஹொரவப்பொத்தானை மதவாச்சி சந்தி கெவல் 20 எனும் இடத்தை சேர்ந்த மலிந்து என்ற வாலிபரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிலில் வேகமாக சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
