Header Ads

Breaking News
recent

திருமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் டேஞ்சர் விளம்பரப்பலகை - மக்கள் விசனம்


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் டேஞ்சர் விளம்பரப்பலகை போடப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் பெற்றோல் நிரப்பு நிலையம், பொதுச்சந்தை ஆகியவை காணப்படுகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபைக்குச் சொந்தமான குழாய் உடைந்து நீர் வெளியேறியுள்ளது.


இதனால் அப்பகுதி குளி தோண்டப்பட்டு புணர் நிர்மாணம் செய்யப்பட்டிருந்த நிலையில் சீர் செய்யப்படாமல் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அதில் டேஞ்சர் என்ற விளம்பரப் பலகை போடப்பட்டு உள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

எனவே இவ் வீதியில் காணப்படுகின்ற குழியை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Powered by Blogger.