சொத்து வரி செலுத்தாத நபருக்கு விளக்கமறியல்!!!
அரசாங்கத்துக்கு சொத்து வரி செலுத்தாமல் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவரை இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் திருகோணமலை-நீதிமன்ற வீதி, மனையாவெளி பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து நெவில் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- தனியார் கம்பெனி ஒன்றினை நடாத்தி வந்த கம்பெனியின் முகாமையாளர் அரசாங்கத்திற்கு சொத்து வரி செலுத்தாத குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது இந்நிலையில் செல்லாமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை திருகோணமலை பொலிஸார் கைதுசெய்து இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
