நியூஸிலாந்த்தின் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபருக்கு எவ்வித பிற்கால மன்னிப்பு சலுகையுமின்றி ஆயுள் தண்டனை!!!
நியூஸிலாந்த்தின் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபருக்கு எவ்வித பிற்கால மன்னிப்பு சலுகையுமின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரே நாளில், ஒரே நேரம் இரு பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி சுமார் 51 முஸ்லிம்களை கொன்று குவித்த 29 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டவன் #Brenton_Tarrant நேற்றைய தினம் நியுஸிலாந்து நீதிமன்றத்தால் எவ்வித பிற்கால மன்னிப்பு சலுகையுமின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டான்.
இது மரண தண்டனை இல்லையெனினும் நியுஸிலாந்தின் வரலாற்றில் இத்தகைய தீர்ப்பு இதுவே முதல்தடவை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மூன்று பள்ளிவாசல்கள் மீது ஒரே தடவையில் பாரிய தாக்குதல் நடத்த இவன் திட்டமிட்டிருந்ததாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
