Header Ads

Breaking News
recent

இலங்கையில் 2881 பேருக்கு கொரோனா தொற்று


 நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,881 ஆக பதிவாகியுள்ளது.


இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 2,638 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


அத்துடன், கொரோனா தொற்று காரணமாக துபாயில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று (13) நாடு திரும்பியுள்ளனர்.


290 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.


இவர்களை தவிர, கத்தாரிலிருந்து 13 பேரும் சென்னையிலிருந்து 39 பேரும் நாட்டை வந்தடைந்தனர்.


விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அனைவரும் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Powered by Blogger.