Header Ads

Breaking News
recent

கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கில் - பெண் ஒருவர் பலி

 

மினுவங்கொட, அம்பகஹவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரில் வந்த டிரக்டர் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து எதிரில் வந்த பவுஸர் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மினுவங்கொட பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மினுவங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Powered by Blogger.