Header Ads

Breaking News
recent

நான் நீதி அமைச்சர் - தீவிரவாதிகளுக்கு இடமில்லை

 நாட்டு மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் எமது முயற்சியை சிலர் விரும்பவில்லை.


 இதற்கு காரணம் என்னவெனில் அவ்வாறானவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தீவிரவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அலிஸ் சப்ரி தெரிவித்தார்.


கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.


தாம் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளமை ஒரு பிரிவை சார்ந்த மக்களுக்காக மாத்திரம் அல்ல என்றும் அனைத்து நாட்டு மக்களுக்குமே ஆகும் என்றும் தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ தீவிரவாதம் தொடர்பிலான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.


நான் நீதி அமைச்சர் என்ற ரீதியில் செயற்படுவேன்.


நாம் ஒரு சமூக பிரிவினர் இந்த நாட்டை நாம் நேசிக்கின்றோம்.


 யாராவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருப்பார்களாயின் அவர்களின் இறுதி வரையில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

Powered by Blogger.