Header Ads

Breaking News
recent

35 இலட்சம் பெறுமதியான மஞ்சள் கடற்படையினரால் சுற்றிவளைப்பு

 கற்பிட்டி, ஏத்தாலை பிரதேசத்தில் 1004 கிலோகிராம் மஞ்சள் தொகையொன்று நேற்று (25) கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 35 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு கைப்பற்றப்பட்ட குறித்த மஞ்சள் தொகை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே பொதிகள் செய்யப்பட்ட குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டுள்ளது.

பொதி செய்யப்பட்ட 1004 கிலோகிராம மஞ்சள் மூடைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு தப்பிச் சென்ற லொறியின் சாரதி மற்றும் லொறியின் உரிமையாளர் உள்ளிட்டோரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த கற்பிட்டி பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Powered by Blogger.