வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயம் : திருகோணமலை!!!!
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மிரிஸ்வெவ பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயம் அடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று(09) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி போக்குடன் (கல்வெட்டு) மோதி மறுபக்கம் குடைசாய்ந்துள்ள நிலையில் அதில் பயணித்த ஆறு பேரில் பெண்ணொருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த பெண் அருகிலுள்ள மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது விருப்பத்தின் படி வீட்டுக்கு சென்றுள்ளதாகவும் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதாகவும் கையொப்பமிட்டு சென்றதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


