Header Ads

Breaking News
recent

சஜித்துக்கு திங்கள் வரை காலக்கெடு ; இல்லையேல் தனித்து இயங்குவோம்!


ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், பாராளுமன்றத்தில் சிறுபான்மை கட்சிகளின் 15 எம்.பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமரவேண்டி வரும் என சஜித் பிரேமதாசவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால் த.மு.கூ (6), ஸ்ரீ.ல.மு.கா (5), அ.இ.ம.கா (4) ஆகிய சிறுபான்மை கட்சிகளின் 15 எம்.பிக்களும் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்து திங்கள் வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.