Header Ads

Breaking News
recent

திருகோணமலை - ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகம் தெரிவு!!!!!

(எம்.யூஸூப் பஹ்மி)
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் (OBA) சங்க பொதுக் கூட்டம் நேற்று (15) சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் (OBA) சங்க புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய நிர்வாக சபை தலைவராக பாடசாலையின் அதிபர்  எம்.பீ.எம்.சமீம் அவர்களும், உப தலைவராக  பிரதி அதிபர்: ஏ.எஸ்.எஸ்.இக்பால் அவர்களும்,செயலாளர் எஸ்.எச்.எம். அஸத்  மற்றும்  உப செயலாளர்களாக எம்.எம்.சர்ராஜ் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன். 

மேலும் பொருளாளராக : ஆர்.எம்.ரஷாட் மற்றும் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக மௌலவி ஏ.எஸ்.எம்.யஸீர் எம்.யூஸூப் பஹ்மிஎச்.எம்.பஹீத்எம்.ஆர்.அபுல்ஹஸன் மற்றும் கே.எம்.ஹமீஸ்  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பாடசாலை வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க வெண்டும் என்று புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் வெண்டுகோள் விடுக்கின்றனர்.











Powered by Blogger.