Header Ads

Breaking News
recent

இந்து சமய நிறுவனங்களின் ஒன்றுகூடலும் தலைமைத்துவப் பயிற்சியும் : திருகோணமலையில் !!!

இந்து சமய நிறுவனங்களின் ஒன்றுகூடலும் தலைமைத்துவப் பயிற்சியும் நேற்று (15) திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் சுகாதார வழிக்கட்டலுக்கு அமைய நடைபெற்றது.

கலாச்சாரத் திணைக்களத்தின் மேற்படி நிகழ்வானது திருகோணமலை மாவட்டச் செயலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இது திருகோணமலை இந்து கலாச்சரா மண்டபத்தில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் உதவிச் செயலாளர் திரு. எஸ். பிரதீபன் அவர்களின் தலைமையில்  ஆரம்பமானதுடன்.

திருகோணமலை பிரதேச செயலகப்பிரிவு மற்றும் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவில் இயங்கும் சமய நிறுவனங்கள், ஆலய நிர்வாகங்கள், அறநெறிப் பாடசாலைகள் என்பனவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினாகளுக்கு தலைமைத்துவப் பயிற்சியை வழங்கும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும்  மட்டக்களப்பு இராமகிரஸ்ண மிசன் சுவாமிகளின் ஆன்மீக உரை மற்றும் பயிசியும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.