Header Ads

Breaking News
recent

அம்பானி பின்னடைவு : உலக பணக்காரர்களில் எத்தனையாம் இடம்

 ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் கடந்த சில நாட்களாக சரிந்து வருவதை தொடர்ந்து, உலகின் 4 ஆவது பணக்காரர் என்ற இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி 6 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.


கடந்த 7 நாட்களில் ஒரு கட்டத்தில் 2134 ரூபாய் வரை சென்ற ரிலையன்ஸ் பங்கு படிப்படியாக குறைந்து 2091 ரூபாயாக சரிந்துள்ளது. 


இந்த மாத துவக்கத்தில் நிகர சொத்து மதிப்பு 6.04 லட்சம் கோடியாக உயர்ந்ததை தொடர்ந்து முகேஷ் அம்பானி, LVMH தலைவர் பெர்னார்ட் அர்நால்ட்டை ஐந்தாவது இடத்திற்கு தள்ளி விட்டு நான்காவது இடத்தை பிடித்தார்.


இப்போது அம்பானியின் சொத்து மதிப்பு 5.87 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. எனவே அவரை பின்னுக்குத் தள்ளி டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் 4 ஆவது இடத்தையும், பெர்னார்ட் அர்நால்ட் 5 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Powered by Blogger.