வவுனியா செட்டிக்குளம் வைத்திசாலை முன்பாக கொதித்தெழுந்த மக்கள் கூட்டம்
வவுனியா செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையினை நீக்க கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வைத்தியசாலை வாயிலின் முன்பாக இன்று (31.08.2020) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
"ஆரம்பி ஆரம்பி மூடிய நோயாளர் விடுதியை ஆரம்பி , வைத்தியரை நியமி "
போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்ட இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன் ஒரு வாரத்தில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


