Header Ads

Breaking News
recent

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இரண்டாயிரத்து 841ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இருவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளான 12 குணமடைந்து இன்று வீடுதிரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 576ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 254 பேர் வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.