இளம் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!!
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஹாபீஸ் நசீர் அஹமட் இன்று 08.08.2020ம் திகதி சனிக்கிழமை மாலை காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயலுக்கு உரை நிகழ்த்த வந்திருந்தார்.
இதன் போது சிலர் அவரை வரவேண்டாமென தடுத்ததையடுத்து பள்ளிவாயலுக்குள் அமளி துமளி ஏற்பட்டது.
அங்கு சென்ற இளம் ஊடகவியலாளரும் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினருமான முகம்மட் ஆதிப் அங்கு நின்ற இருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.
இவரது கையடக்கத்தொலைபேசியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் காட்டியும் இவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

