எந்தவித அமைச்சு பதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை : டக்ளஸ் தேவானந்தா !!!
![]() |
| (டீ.எஸ்.டீ.தூயவன்) |
வன்னி மக்கள் ஒரு பிரதிநியை தந்துள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது இருப்பினும் மக்களுடனான எமது இருப்பு நாங்கள் இந்த மக்களுக்கு செய்துள்ள சேவைகளை ஒப்பிடும் பொழுது மக்கள் எமக்கு தந்த பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என்பதுவே எனது ஆதங்கம்.
இருப்பினும் மக்களின் ஆணையை மதித்து கிடைத்துள்ள இந்த ஒரு ஆசனத்தை வைத்து எம்மால் முடிந்தமானவரை பணி செய்வதே எம் கடமை - வவுனியாவில் ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளித்த தலைவர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்ட கருத்தை தெரிவித்தார் .
மேலும் ஊடகவியலாளர் எந்தவிதமான அமைச்சு பதவியை எதிர் பார்த்துள்ளீர்கள் என கேட்டபோது நான் எதிர்பார்தது அமைச்சு பதவியை அல்ல மக்களின் அதிக ஆணையை ஆகவே எந்த அமைச்சையும் நான் எதிர்பார்த்து இருக்கவில்லை ஐனாதிபதியும் பிரதமரும் நாளைய தினம் வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளனர் அதற்காகவே எனது பயணம் எனவும் தெரிவித்தார்.
