Header Ads

Breaking News
recent

சசிகலாவிற்கு நீதிவேண்டி யாழ் மாவட்டத்திலுள்ள அமரர் நடராஜா ரவிராஜ்ஜின் நினைவுத்தூபி அருகில் போராட்டம்!

(டீ.எஸ்.டீ.தூயவன்) 
யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள அமரர் நடராஜா ரவிராஜ்ஜின் நினைவுத்தூபி அருகில் சசிகலா ரவிராஜுக்கு நீதிவேண்டி போராட்டம் இடம்பெற்றது.

சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் இன்று (சனிக்கிழமை) இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் சசிகலா ரவிராஜுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள அமரர் நடராஜா ரவிராஜ்ஜின் சிலை கறுப்பு, சிவப்பு துணிகளால் மூடப்பட்டு சசிகலாவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.