Header Ads

Breaking News
recent

ஐ.தே.கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொள்வாரா கருஜயசூரிய

 கட்சியை விட்டுச் சென்றவர்களை ஒன்றிணைக்கக்கூடிய முதிர்ச்சி வாய்ந்த நபரான முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள ​வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த சங்கத்தின் செயலாளர் உபாலி அமரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

சிக்கலான நிலைமையில் கட்சியை நிலைநிறுத்தி மீண்டும் புத்துணர்ச்சியூட்டக்கூடிய ஒரே நபராக அதனை வெற்றிகரமாக  முன்னெடுத்து செல்லுமாறு குறித்த சங்கத்தினர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சின் பல்வேறு பதவிகளை பெற்றுக் கொள்ள போட்டிபோடும் எந்தவொரு நபருக்கும் தலைமைத்துவத்தை வகிக்க முடியாது எனவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஏனெனில் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தவர்கள் எனவும், அவர்களுள் பலருக்கு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.


Powered by Blogger.