Header Ads

Breaking News
recent

பற்றைக்குள் எறியப்பட்டிருந்த நிலையில் பெண் சிசுவின் சடலம் மீட்பு!

கொஸ்லந்தை, பூனாகலைப் பகுதியைச் சேர்ந்த ஆர்னோல்ட் பிரிவு பெருந்தோட்ட குடியிருப்பின் பின்புற பற்றைக்குள் எறியப்பட்டிருந்த நிலையில் பெண் சிசுவின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொஸ்லந்தைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து, இன்று (10) சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக சிசுவின் சடலம் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அத்துடன், சிசுவின் தாயென கருதப்படும் 28 வயதுடைய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Powered by Blogger.