Header Ads

Breaking News
recent

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு : ஒருவர் படுகாயம்!!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப் பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்   (15) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த எண்ணெய் ஏற்றும் புகையிரதத்தில் நேற்று  மாலை 04.15 மணியளவில் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து பாசிக்குடா நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கல்குடாப் புகையிரத நிலைத்திற்கருகிலுள்ள பாதுகாப்புக் கடவையை உடைத்துக்கொண்டு புகையிரதத்தில் மோதுண்டுள்ளது.

இவ்விபத்தில் வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தின் சாரதியான செபஸ்தியன் அருள்நாதன் (வயது – 48) என்பவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக கல்குடாப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.