புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!
வவுனியா, பூவரசங்குளம் பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் காணியொன்றில் இந்த புதையல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 23 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், பூவரசங்குளம், கம்பஹா, கடவத்தை, அத்துருகிரிய, கட்டுநாயக்க, வெயாங்கொட மற்றும் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
