Header Ads

Breaking News
recent

கப்பல் ஒன்று தீக்கிரை

 அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பலொன்றில் தீ பற்றிக்கொண்டது.

MT நியூ டைமைன் கப்பலில் உள்ள ஊழியர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கையை கடற்படை மேற்கொண்டிருப்பதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் இந்தியாவை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பணியாளர்களை மீட்கும் பணியை திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து 2 கப்பல்களும், ஹம்பாந்தோட்டை கடற்படை முகாமில் இருந்து ஒரு கப்பலும் சம்பந்தப்பட்ட கடற்பிரதேசத்திற்கு சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த கப்பலை அவதானிப்பதற்காக குறிப்பிட்ட கடல் பிரதேசத்தில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளர்.


Powered by Blogger.