Header Ads

Breaking News
recent

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு : பலர் கைது!!!


யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியில் இன்று (01) காலை முதல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதுடன், கஞ்சா மற்றும் ஹெரோயின்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.