தடம்புரண்டது தொடரூந்து : ரயில் சேவையில் தாமதம்
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகியவற்றுக்கிடையிலான ரயில்சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
களுத்துறை பகுதியில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று முற்பகல் 8.15 அளவில் குறித்த பகுதியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த ரயில்மார்க்கத்தில் பயணிக்கும் பிரதான ரயில்கள் மற்றும் அலுவலக ரயில்கள் என்பனவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை ரயில்பாதைய புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
