Header Ads

Breaking News
recent

குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்!!!


குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து கணவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் யாழ். வடமராட்சி, அல்வாய் வடக்கைச் சேர்ந்த ரூபிகா (வயது – 22) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த (04) எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்குக் குடும்பத் தகராறு காரணமாக கணவர் தீ மூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட கணவர் நேற்று முற்பகல் நெல்லியடிப் பொலிஸாரால் மீளவும் கைதுசெய்யப்பட்டார்.

இளம் குடும்பப் பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.