20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!!!!
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
மேலும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

