இலங்கையில் மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 256 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அவர்களில் 39 பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும், ஏனைய 217 பேர் அவர்களுடன் தொடர்பினை வைத்திருந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 865 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
