தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் 316 பேர் இன்று வெளியேற்றம்!!!!
முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 316 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர்.
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட குறித்த அனைவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த அனைவரும் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 57 ஆயிரத்து 427 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர்.
மேலும் 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் எண்ணாயிரத்து 421 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா தடுப்பு தேசிய செயலணி மேலும் தெரிவித்துள்ளது.
