Header Ads

Breaking News
recent

அமெரிக்க இராஜாங்க செயலாளர் நாளை இலங்கை வருகை !!!


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆர். பொம்பியோ நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார்.
Powered by Blogger.