திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 43 மாணவர்கள் 2019 இல் பல்கலைக்கழகத்திற்கு உள்ளீர்ப்பு!!!!
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 43 மாணவர்கள் 2019 இல் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அலி சப்ரி அப்துல் ஸலாம் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இவ் இலக்கு கல்லூரிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியென கருத்து தெரிவித்த அவர் 2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பின்வருமாறு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்க்கு உள்வாங்கபட்டுள்ளதாக தெரிவித்தார்
மருத்துவம் - 03 மாணவர்களும், Unani மருத்துவம் - 03 மாணவர்களும், பொறியியல் - 05 மாணவர்களும் , முகாமைத்துவம் - 04 மாணவர்களும் மேலும் ஏனைய கற்கை நெறிகளுக்கான 29 மாணவர்களும் கல்லூரியில் மொத்தமாக 43 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்க பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு. இம்மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், SDEC, OBA மற்றும் நலன் விரும்பிகளுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


