Header Ads

Breaking News
recent

கிளிநொச்சி - ஆணையிறவு பகுதியில் விபத்து - இருவர் பலி!!!!!


(ஹாசீம் சஜீத் - இறக்காமம்)
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் நேற்று  இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். 

முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதான ராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய ராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வாகனத்தை செலுத்திய எரிபொருள் கொள்கலன் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Powered by Blogger.