Header Ads

Breaking News
recent

பத்து ஆமைகளுடன் இருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது!!!!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்) 
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகளைக் கொண்டு வந்த இரண்டு சந்தேக நபர்களும், பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு வருவதாக வாழைச்சேனைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.


இதன் போது, புலிபாய்ந்தகல் பொலிஸ் காவலரண் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு வந்த வாழைச்சேனை விநாயகபுரத்தைச்சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும், பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டது.

இதே வேளை, குறித்த சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் வாழைச்சேனை மாவட்ட நீதிபதி நீதவான் எச்.எம்.எம்.பஷீல் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தடுப்பதற்கு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் விஷேட குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.



Powered by Blogger.