Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,844 ஆக அதிகரித்துள்ளது.


மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொத்தணியில் நேற்றைய தினம் (12) 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 1,397 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2 நாட்களில் பரிசீலனைகளை மேற்கொண்டு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,844 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 1,514 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 3,317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.